மஹாளய அமாவாசை மற்றும் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி, சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், தாதம்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, தாதகாப்பட்டி, ஆட்டையாம்பட்டி, ஆத்தூர், மேட்டூர், தம்மம்பட்டி, ஜலகண்டாபுரம், இளம்பிள்ளை, எடப்பாடி ஆகிய 11 உழவர் சந்தைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. நேற்று (அக்.14) மட்டும் உழவர் சந்தைகளில் வழக்கத்தை விட காய்கறி, பழங்கள் விற்பனையாகின.
குறிப்பாக, அகத்திக்கீரை, வாழை இலை, வாழைப்பழம், கத்தரிக்காய், பூசணிக்காய், வெள்ளை பூசணிக்காய், அவரைக்காய் போன்றவை அதிகளவில் விற்பனையானது. ஒரே நாளில் மட்டும் சுமார் ரூபாய் 91.20 லட்சத்துக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனையாகின.
அதேபோல், சேலம் மாநகரில் உள்ள காந்தி மைதானம் மார்க்கெட், பால்மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து மார்க்கெட்டுகளில் காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்க மக்களின் கூட்டம் அலைமோதியது.


