சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின்கீழ் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டுவரும் மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் பொருட்டு (E-Auto Passengers) மின் ஆட்டோ (பயணிகள்) வாங்குவதற்கு மகளிர் திட்டத்தின் மூலம் வங்கிக்கடன் இணைப்பு வழங்கும் திட்டத்திற்கு விருப்பமும் தகுதிகளும் கொண்ட மகளிர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி,தெரிவித்ததாவது:
சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின்கீழ் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டுவரும் மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் பொருட்டு (E-Auto Passengers) மின் ஆட்டோ (பயணிகள்) வாங்குவதற்கு மகளிர் திட்டத்தின் மூலம் வங்கிக்கடன் இணைப்பு வழங்கும் திட்டத்திற்கு விருப்பமும் தகுதிகளும் கொண்ட மகளிர் தேர்வு செய்யப்பட உள்ளதக தெரிவித்ததுடன்.
திட்டம் குறித்து தேர்வு செய்யப்படும் சமுதாய பயனாளிகளுக்கான விபரங்கள் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தில் பதிவு செய்யப்பட்ட மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
பயனாளியின் மகளிர் சுயஉதவிக் குழுவானது பகுதி அளவிலான கூட்டமைப்பு (ALF)ல் இணைவு பெற்றவையாக இருத்தல் வேண்டும்.பயனாளிகள் 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.பயனாளிகள் 25 முதல் 40 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.பயனாளிகள் அனுபவம் மற்றும் மின் ஆட்டோ (பயணிகள்) ஓட்டுவதற்கு பேட்ஜ் உடன் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இத்திட்டத்திற்கு மகளிர் திட்டத்தின் மூலம் வங்கிக்கடன் இணைப்பு வழங்கப்படும்.தொழிலாளர் நலத்துறையின் கீழ் பதிவு செய்திருந்தால் ரூ.1.00 இலட்சம் மானியமும் மீதத் தொகைக்கு வங்கிக்கடனும் பெற்றுத்தரப்படும்.
விருப்பமும் தகுதியுமுள்ள மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் தங்களது சுய விபரங்களை திட்ட இயக்குநர்,மாவட்ட இயக்க மேலாண்மை அலகு அறை எண்:207, மகளிர் திட்டம். இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியரகம் சேலம் 1என்ற முகவரியில் 24.10.2025 மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் பிருந்தாதேவி,தெரிவித்துள்ளார்.

-8nWMIXWPm5.jpg )
-SXgDfGgJfO.jpg)