கடந்த 6 மாதங்களில் சரக்கு, பார்சல் சேவையில் சேலம் ரயில்வே கோட்டம் ரூபாய் 165 கோடி வருவாய் ஈட்டியது. இது கடந்த ஆண்டை விட அதிகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் ரயில்வே கோட்டம் ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான முதல் அரையாண்டில் 14.5 லட்சம் டன் சரக்குகளை கையாண்டு ரூபாய் 156.16 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த நிதியாண்டில் இதே கால கட்டத்தில் ரூபாய் 138.05 கோடி வருவாய் ஈட்டியது. முந்தைய ஆண்டின் வருவாயை விட சுமார் 13.12 சதவீத வளர்ச்சி ஆகும்.
சரக்குகளை பொறுத்த வரை இருகூரில் இருந்து பெட்ரோலிய பொருட்கள் 9.5 லட்சம் டன்களை கையாண்டு ரூபாய் 114.88 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. 2 லட்சம் டன் சிமெண்டு சரக்குகையாண்டு ரூபாய் 10.77 கோடியும், 57 ஆயிரம் டன் இரும்பு மற்றும் ஸ்டீல் உற்பத்தி பொருட்களை சேலம் கோட்டம் கையாண்டு முறையே ரூபாய் 6.94 கோடி வருவாய் ஈட்டபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது


-SXgDfGgJfO.jpg)