ட்ரெண்டிங்

கோவை- ஹிசார் ரயில்களின் நேரம் மாற்றம்!

வரும் நவம்பர் 01- ஆம் தேதி முதல் கோவை- ஹிசார் ரயில்களின் நேரம் மாற்றம் நடைமுறைக்கு வருவதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

 

இது தொடர்பாக, சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கோவை- ஹிசார் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 22476) வாரந்தோறும் சனிக்கிழமை அன்று பிற்பகல் 02.55 மணிக்கு புறப்படும். ஹிசார்- கோவை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 22475) வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று மதியம் 02.30 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை வந்தடையும். இந்த நேரம் மாற்றம் வரும் நவம்பர் 01- ஆம் தேதி அன்று முதல் நடைமுறைக்கு வரும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.