ட்ரெண்டிங்

டிவியை ஆஃப் செய்ததால் ஆத்திரம்... தங்கையின் மகனை சுத்தியால் தாக்கிய தாய்மாமன்!

சேலம் அருகே தங்கையின் மகனை சுத்தியால் தாக்கிய தாய்மாமனை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

சேலம் மாவட்டம், அஸ்தம்பட்டியைச் சேர்ந்த ரம்யா, வேலை நிமித்தமாக ஈரோடு சென்றதால், அவரின் மகனை ரம்யாவின் தந்தை மனோகரன் மற்றும் அண்ணன் மனோஜ் ஆகியோர் கவனித்து வந்துள்ளனர். இந்த நிலையில், மனோஜ், தனது தங்கையான ரம்யாவின் மகனுடன் அடிக்கடி சண்டைப் போட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

 

அவ்வாறு, சம்பவத்தன்று லேப்டாப்பில் கேம் விளையாடிக் கொண்டிருந்த தங்கையின் மகனைக் கண்டித்து, மனோஜ், லேப்டாப்பை ஆஃப் செய்தார்.இதற்கு சிறுவன் டிவி ஆஃப் செய்த நிலையில், ஆத்திரமடைந்த மனோஜ், சிறுவனை சுத்தியால் தாக்கிவிட்டு, தப்பியோடியுள்ளார்.

 

இதில் மயக்கமடைந்த சிறுவன், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். இதனையடுத்து, தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து மனோஜை கைது செய்தனர்.