சேலம்: உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் உடனடி நடவடிக்கை !!!
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் நடைபெற்று வருகிறது இந்நிலையில்,
சேலம், 25 செப்,
சேலம் மாநகராட்சி, சூரமங்கலம் மண்டலம், 18,வார்டு பகுதிக்கு சேர்ந்தவர்களுக்கு இன்று தியாகராஜா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெற்றது.
முகாமில் வழங்கப்பட்ட மனுவின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டன. மேலும் இந்த முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீதும் அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் குறித்தும் கேட்டுக்கொண்டதுடன்,உடனடி தீர்வு காண அதிகாரிகளுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து பேசியதாவது :-
பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை விரைவாக வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த முகாம், பொதுமக்களுக்கு அரசின் திட்டங்கள் நேரடியாக பயன்பெறும் வகையில் உள்ளதாகவும் நேரடியாகவே பல்வேறு பொதுமக்கள் பயன்பெறுவதாகவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. இரா. இராஜேந்திரன், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப. ஆகியோர் கலந்துகொண்டு உதவிகளை வழங்கினர்.

-ts4tJ91q7z.jpg )

-hcTFAGMRGb.jpg)