ட்ரெண்டிங்

ஈரோடு- ஜோலார்பேட்டை ரயில் சேவைத் தொடர்பான முக்கிய அறிவிப்பு!

ஈரோடு- ஜோலார்பேட்டை ரயில் சேவைத் தொடர்பான முக்கிய அறிவிப்பை சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ளது.

 

அதில், ஜோலார்ப்பேட்டை ரயில்வே யார்டில் தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், ஈரோடு- ஜோலார்பேட்டை ரயில் (ரயில் எண் 06412) அக்டோபர் 10, 12, 13, 21, 23 ஆகிய தேதிகளில் ஈரோடு முதல் திருப்பத்தூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

 

ஜோலார்பேட்டை- ஈரோடு ரயில் (ரயில் எண் 06411) அக்டோபர் 10, 12, 13, 21, 28 ஆகிய தேதிகளில் மட்டும் திருப்பத்தூர் முதல் ஈரோடு வரை மட்டுமே இயக்கப்படும். ஜோலார்பேட்டையில் இருந்து திருப்பத்தூருக்கு மேற்கண்ட நாட்களில் இயக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.