ட்ரெண்டிங்

சேலத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை !

 

சேலம் மாநகரப் பகுதிகளில்  

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் “ சிங்கப்பெண் சிறப்பு படை(SSF)சேலம் மாநகர காவல் ஆணையாளர் அனில்குமார் கிரி துவக்கி வைத்தார்..

 

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை நேரடியாக சேலம் மாநகர காவல் ஆணையாளர் நேரடி மேற்பார்வையில் செயல்பட இருக்கிறது .* 

 

காவல் உதவி ஆணையாளர், காவல் உதவி ஆய்வாளர் மற்றும் 2 சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள், 2 பெண் தலைமை காவலர்கள் என இதில் ஆறு பேர் பணியாற்ற உள்ளனர். 

 

இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு தேவையான நான்கு சக்கர வாகனம், தொடர்பு கொள்ளும் சாதனங்கள், காவல்துறை உடலில் பொருத்தப்பட்டிருக்கும் கேமரா மற்றும் இதர வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.