சேலம் மாவட்டம், கருப்பூர் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் ராஜா. இவர் கோட்டகவுண்டன்பட்டி, சாமிநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் பங்களிப்புடன் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்துவதற்கு பண உதவிப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வசூலித்த பணத்தைக் கொண்டு, அந்த பகுதிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படவில்லை. இது முறைகேடு செய்ததாக ராஜா மீது புகார் எழுந்த நிலையில், இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி அறிக்கைத் தாக்கல் செய்ய துணை ஆணையர் கவுதம் கோயல் அவர்களுக்கு சேலம் மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, தற்போது கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வரும் ராஜாவை, மாநகர ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து, மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி உத்தரவிட்டுள்ளார்.


