ட்ரெண்டிங்

கூடுதல் வகுப்பறைகள், சுகாதார வளாகத்தினைத் திறந்து வைத்த எம்.எல்.ஏ., மேயர்!

 

சேலம் மாநகராட்சியின் அம்மாப்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட 9- வது வார்டில் உள்ள அல்லிக்குட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் கல்வி நிதி 2022-2023-ன் படி ரூபாய் 34.80 லட்சம் மதிப்பீட்டில் 140.62 சதுர மீட்டர் பரப்பளவில் 2 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 5 சுகாதார வளாகங்களும், 37- வது வார்டில் உள்ள காமராஜர் காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் கல்வி நிதி 2022-2023-ன் படி ரூபாய் 15.70 லட்சம் மதிப்பீட்டில் 10 சுகாதார வளாகத்தினை சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

 

இந்த நிகழ்ச்சியில், அம்மாப்பேட்டை மண்டலக் குழுத் தலைவர் தனசேகர், செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி ஆணையாளர் வேடியப்பன், மாமன்ற உறுப்பினர்கள் தெய்வலிங்கம், திருஞானம், உதவி பொறியாளர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.