சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள நீர்முள்ளிக்குட்டைப் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் மகன் விஜயக்குமார். இவருக்கு வயது 24. இவர் நேற்று (அக்.01) இருசக்கர வாகனத்தில் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் சாலையில் இருந்து கொண்டலாம்பட்டி நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தார்.
அதிவேகமாக விஜயக்குமார் சென்ற நிலையில், நிலைத்தடுமாறி பைபாஸ் சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் மோதியுள்ளார். இதில் தூக்கி வீசப்பட்ட விஜயக்குமார், ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரை சாலையோரம் சென்றவர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் விஜயகுமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து சூரமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


