ட்ரெண்டிங்

பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்த அமைச்சர்!

 

சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து அஸ்தம்பட்டி 13- வது வார்டில் அண்ணா நகர் 4-வது தெருவில் ரூபாய் 12.50 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிகள், அஸ்தம்பட்டி 7- வது வார்டு, எழில் நகர் 2-வது தெருவில் ரூபாய் 19 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுசுவர் அமைக்கும் பணிகள், கன்னங்குறிச்சி பேரூராட்சியின் 1- வது வார்டு தாமரை நகர் மயானத்திற்கு ரூபாய் 6.30 லட்சம் மதிப்பீட்டில் மேற்கூரை மற்றும் தண்ணீர் தொட்டி அமைக்கும் பணிகள், அஸ்தம்பட்டி 6- வது வார்டு, பெரியார் நகரில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலைக் கடை அமைக்கும் பணிகள் ஆகியவற்றை இன்று (ஜன.18) தி.மு.க.வின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேந்திரன் பூமி பூஜை செய்துத் தொடங்கி வைத்தார். 

 

நிகழ்ச்சியில், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், கன்னங்குறிச்சி பேரூராட்சித் தலைவர், உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.