ட்ரெண்டிங்

தங்கநகைகள், பணத்தை அபேஸ் செய்த சகோதரர்.... காவல்நிலையத்தில் புகார் அளித்த சகோதரி!

சேலம் மாவட்டம், தாதகாப்பட்டியில் உள்ள பெரியண்ணன்பிள்ளை காம்பவுண்ட் பகுதியில் வசித்து வரும் பெண், அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

அந்த புகார் மனுவில்,தனது தந்தையின் குடும்பச் சொத்தை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த ரூபாய் 12 லட்சம் ரொக்கம் மற்றும் 25 சவரன் தங்கநகைகள் மற்றும் 2 கிலோ வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை தாதகாப்பட்டியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி லாக்கரில் வைத்தேன்.

 

ஆனால் எனக்கு தெரியாமலேயே எனது சகோதரர் லாக்கரில் வைக்கப்பட்ட தங்கநகைகள், ரொக்கம் மற்றும் வெள்ளிப்பொருட்களை எடுத்துக் கொண்டார். அவற்றை எனது சகோதரிடம் கேட்டேன்.அவற்றைத் தர மறுக்கிறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுத்து, அவரிடம் உள்ள தங்கநகைகள், ரொக்கம், வெள்ளிப்பொருட்களை மீட்டு தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 

 

இந்த புகார் குறித்து அன்னதானப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்