ட்ரெண்டிங்

காந்தி சிலைகளுக்கு நாளை மரியாதைச் செலுத்த வேண்டும்-விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு புஸ்

மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி, விஜய் மக்கள் இயக்கத்தினர் நாளை (அக்.02) காந்தி சிலைகளுக்கு மரியாதைச் செலுத்த வேண்டும் என அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.

 

அண்மையில் தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் பொறுப்பாளர்களை நடிகர் விஜய் நியமித்திருந்தார். இதையடுத்து, நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கான நகர்வுகளைத் தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், அம்பேத்கர் காமராஜர் உள்ளிட்ட தலைவர்களின் பிறந்தநாளில் அவர்களின் சிலைகளுக்கு மரியாதைச் செலுத்த வேண்டும் என விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அந்த வகையில், நாளை (அக்.02) மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு மரியாதைச் செலுத்த வேண்டும் என நிர்வாகிகளுக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.

 

மேலும், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் இல்லங்களுக்கு சென்று அவர்களை கவுரவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.