ட்ரெண்டிங்

புதிய வகை பால் பாக்கெட்டை அறிமுகப்படுத்திய சேலம் ஆவின் நிறுவனம்!

சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனம், பால், தயிர், மோர், பால்கோவா, ஐஸ்க்ரீம், உள்ளிட்ட பல்வேறு வகையான பால் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அவ்வப்போது, புதிய ஆவின் பொருட்களை அறிவித்து வரும் சேலம் ஆவின், தற்போது வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி இருக்கும் செறிவூட்டப்பட்ட டிலைட் என்ற வகை பாலை அறிமுகம் செய்துள்ளது.

500 மில்லி பாக்கெட்டுகளில் மட்டுமே கிடைக்கும் டிலைட் பாலின் விலை ரூபாய் 22 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்று (செப்.21) அறிமுகம் செய்யப்பட்ட டிலைட் வகை பால் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இது குறித்து சேலம் ஆவின் பொது மேலாளர் ராஜசேகர் எஸ்.கரிசெட்டி கூறுகையில், நுகர்வோர்களின் வேண்டுகோளுக்கிணங்க, 200 மில்லி பால் பாக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 250 மில்லி எடைக்கொண்ட பாக்கெட் பால், ரூபாய் 11- க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், 50 மில்லி குறைத்து 200 மில்லி எடைக்கொண்ட பால் பாக்கெட் ரூபாய் 10- க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றார்.