ட்ரெண்டிங்

வட்டாட்சியர்களைப் பணியிட மாற்றம் செய்து சேலம் மாவட்ட ஆட்சியர் அதிரடி!

சேலம் மாவட்டத்தில் 10 வட்டாட்சியர்களைப் பணியிட மாற்றம் செய்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, பேரிடர் மேலாண்மைப் பிரிவு தனி வட்டாட்சியராக பிரகாஷ், சங்ககிரி சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராக வல்ல முனியப்பன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேட்டூர் வட்டாட்சியராக விஜி, மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளராக முத்துராஜா, இடைப்பாடி தாசில்தாராக வாசுகி, மேட்டூர் ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளராக பாலகிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

சேலம் தெற்கு தாசில்தாராக தமிழ் முல்லை, வாழப்பாடி வட்டாட்சியராக செல்லதுரை, பறக்கும் படை தனி வட்டாட்சியராக கோபாலகிருஷ்ணன், விமான நிலைய விரிவாக்கத் திட்ட நிலம் எடுப்பு தனி வட்டாட்சியராக ராஜேஷ் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.