ட்ரெண்டிங்

ஓமலூர் ஆட்டுச்சந்தையில் ஆடுகள் வரத்துக் குறைந்தது!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஓமலூர் ஆட்டுச்சந்தையில் ஆடுகளின் வரத்தும், விலையும் கணிசமாகக் குறைந்ததால் வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர்.

 

வழக்கமாக, சேலம் மாவட்டத்தில் ஓமலூர் ஆட்டுச்சந்தையில் இறைச்சிக்கான ஆடுகளின் விற்பனை களைக்கட்டும் நிலையில், வளர்ப்புக்காக வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளை மக்கள் வாங்கிச் சென்றனர். 10 கிலோ முதல் 35 கிலோ எடைக்கொண்ட ஆடுகள் 7,500 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை விலைப் போனதாகவும், இன்றைய சந்தையில் 50 லட்சம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனையானதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

இந்த ஆட்டுச்சந்தைக்கு சேலம் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். எனினும், வழக்கத்தை விட ஆடுகளின் விலைக் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.