ட்ரெண்டிங்

சேலம் வழியாக கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! 

சேலம் வழியாக கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்களை அறிவித்தது தெற்கு ரயில்வே. 

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஏப்ரல் 10, 17, 24 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து கொச்சுவேலிக்கும், மறுமார்க்கத்தில் ஏப்ரல் 11, 18, 25 ஆகிய தேதிகளில் கொச்சுவேலியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. 

சிறப்பு ரயில்கள் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.