சேலம் மாவட்டத்தில் உள்ள ஐவேலி, நத்தக்கரை மற்றும் தும்பிப்பாடி ஆகிய துணை மின்நிலையங்களில் மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், நாளை (செப்.16) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஐவேலி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட சங்ககிரி நகர், சங்ககிரி ரயில்வே ஸ்டேஷன், தேவண்ணக்கவுண்டனூர், சுண்ணாம்புக்குட்டை, ஐவேலி, ஒலக்கச்சின்னானுர், தங்காயூர், அக்கம்மாப்பேட்டை, வடுகப்பட்டி, இடையப்பட்டி, வளையசெட்டிப்பாளையம், ஆவரங்கப்பாளையம், வைகுந்தம், இருகாலூர், வெள்ளையம்பாளையம், காளிகவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் மேற்கண்ட நாளிலும், நேரத்திலும் மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நத்தக்கரை துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட ஆறகளூர், ஆரத்தி அகரம் , கோவிந்தம்பாளையம், வேப்பம்பூண்டி, புளியங்குறிச்சி, சித்தேரி, பெரியேரி, நத்தக்கரை, தலைவாசல், இலுப்பநத்தம், சாத்தப்பாடி, சார்வாய், தென்குமரை, தேவியக்குறிச்சி, மணிவிழுந்தான் காலனி, மணிவிழுந்தான் வடக்கு, பட்டுத்துறை, நாவக்குறிச்சி, சிறுவாச்சூர், ஊனத்தூர், புத்தூர், நாவலூர், தியாகனூர், காமக்காப்பாளையம் ஆகிய பகுதிகளில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள நாளிலும், நேரத்திலும் மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தும்பிப்பாடி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட ஓமலூர், சிக்கனம்பட்டி, தொட்டம்பட்டி, தும்பிப்பாடி, தின்னப்பட்டி, பண்ணப்பட்டி, பூசாரிப்பட்டி, காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டை, கொங்குபட்டி, செம்மாண்டப்பட்டி, சிந்தாமணியூர், பஞ்சுகாளிப்பட்டி, தாராபுரம், சின்ன திருப்பதி, காருவள்ளி, பெரியப்பட்டி, மரக்கோட்டை, கொட்டாலூர் புதூர், கஞ்சநாயக்கன்பட்டி, கோட்டாங்கல்லூர், பெரியசாத்தப்பாடி, சின்னசாத்தப்பாடி, அரங்கனூர், ஓலைப்பட்டி, சுட்டபெரியாம்பட்டி, ஊ.மாரமங்கலம், பச்சனம்பட்டி, கருப்பனம்பட்டி, பல்பாக்கி, புக்கம்பட்டி, எம்.என்.பட்டி, வடகம்பட்டி ஆகிய பகுதிகளில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள நாளிலும், நேரத்திலும் மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.


