ட்ரெண்டிங்

ஜன.22- ல் சேலம் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது!

 

வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் 2024 வருகின்ற ஜனவரி 22- ஆம் தேதி அன்று சேலம் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

 

இதுகுறித்து சேலம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கார்மேகம் தெரிவித்துள்ளதாவது, "இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி 2024- ஆம் ஆண்டிற்கான புகைப்பட வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 2023- ஆம் ஆண்டு அக்டோபர் 27- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்பட்டு சிறப்பு சுருக்க முறை திருத்தத்திற்கான பணிகள், அன்றைய தினம் முதல் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 27- ஆம் தேதி முதல் முதல் டிசம்பர் 09- ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகளுக்கான படிவங்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 05- ஆம் தேதி அன்று வெளியிடப்படுவதற்கு பதிலாக, இறுதி வாக்காளர் பட்டியல் வருகின்ற ஜனவரி 22- ஆம் தேதி திங்கட்கிழமை அன்று வெளியிடப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.