ட்ரெண்டிங்

அனைத்து கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது- சேலம்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக பொதுமக்களின் கோரிக்கைகளைத் தெரிவிக்க சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடக்க விழா இன்று (செப்.15) முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இத்திட்டம் குறித்த செயல்பாடுகள் தொடர்பாக தகவல்கள் வழங்கிடவும், பொதுமக்களின் கோரிக்கைகள் அல்லது குறைகள் இருப்பின் உதவி மைய அலுவலர்கள் மூலம் தகுந்த நடவடிக்கை எடுத்துக் குறைகளைக் களைந்திடவும், மேலும், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் உதவி மைய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

குறிப்பாக, செப்டம்பர் 15- ஆம் தேதி மன்றி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விழா நடைபெறும் இடமான சேலம் அரசு கலைக் கல்லூரியில் செயல்படும் உதவி மையத்தில் சேலம் மேற்கு மண்டல துணை வட்டாட்சியர் விவேகானந்தன் தொலைபேசி எண் 63813- 48798 மற்றும் தனி வட்டாட்சியர்/ முதுநிலை வருவாய் ஆய்வாளர் பாஸ்கரன் தொலைபேசி எண் 94421- 70009 உதவி மைய அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, எடப்பாடியில் விழா நடைபெறும் குரும்பப்பட்டியில் எடப்பாடி வட்ட வழங்கல் அலுவலர் ஜெயந்தி தொலைபேசி எண் 90037- 80985 மற்றும் எடப்பாடி தனி வருவாய் ஆய்வாளர் தங்கபாலு தொலைபேசி எண் 81223- 59005 ஆகியோர் உதவி மைய அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு மையத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் ரவிச்சந்திரன் தொலைபேசி எண் 94423- 57516 உதவி மைய அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளது.

 

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை சிறப்பாகச் செயல்படுத்திடும் வகையில், பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் புகார் இருப்பின் அதன் விவரத்தினை தனிப் பதிவேட்டில் பதிவு செய்து, அனைத்து அழைப்புகளின் விவரங்களின் தகவல்களையும் உடனடியாக தலைமையிடத்திற்கு அனுப்பி உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து உதவி மைய அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.