ட்ரெண்டிங்

சேலத்தில் இருந்து திருப்பதிக்கு சிறப்புப் பேருந்துகள்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, சேலம், சென்னை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

 

நடப்பாண்டில் திருப்பதி திருமலையில் இரண்டு முறை பிரம்மோற்சவம் விழா நடைபெறவுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு பக்தர்களின் வசதிக்காக, தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், சென்னை, திருச்சி, தஞ்சை, சேலம். காரைக்குடி, மதுரை, கும்பகோணம், கோவை ஆகிய நகரங்களில் இருந்து திருப்பதிக்கு இரு மார்க்கத்திலும் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது.

 

முதல் பிரம்மோற்சவத்திற்கான சிறப்புப் பேருந்துகள் வரும் செப்டம்பர் 17- ஆம் தேதி முதல் செப்டம்பர் 19- ஆம் தேதி வரை இயக்கப்படவுள்ளன. www.tnstc.in, TNSTC Official ஆப் மூலம் சிறப்பு பேருந்துகளுக்கு முன்பதிவுச் செய்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வரும் செப்டம்பர் 17- ஆம் தேதி முதல் செப்டம்பர் 30- ஆம் தேதி வரை தமிழகத்தில் இருந்து திருப்பதிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.