ட்ரெண்டிங்

கூட்டுறவு பண்டக சாலையில் மலிவு விலை தக்காளி விற்பனையைத் தொடங்கி வைத்த எம்.எல்.ஏ.!

சேலம் மாநகராட்சியில் முதற்கட்டமாக என்.ஜி‌.ஜி.ஓ. கூட்டுறவு பண்டக சாலையில் மலிவு விலையில் தக்காளி விற்பனையை தி.மு.க.வின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான ராஜேந்திரன் இன்று (ஜூலை 11) தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து,  நீண்ட வரிசையில் காத்திருந்த மக்களுக்கு ஒரு கிலோ வீதம் ரூபாய் 60- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சேலம் சந்தைகள், மார்க்கெட்டுகள் மற்றும் சில்லறை விற்பனையில் தக்காளி ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிகழ்வின் போது, சேலம் மாநகராட்சி ஆணையாளர் சீ.பாலச்சந்தர் இ.ஆ.ப., கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் ரவிக்குமார் ஆகியோர் உடனிருந்தன