பெங்களூரு- ஜோலார்பேட்டை மார்க்கத்தில் ரயில்வே பாலங்களில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் சுமார் ஆறு ரயில்களின் சேவையை குறிப்பிட்ட நாட்களுக்கும் மட்டும் ரத்துச் செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பில், "பெங்களூரு- ஜோலார்பேட்டை ரயில் மார்க்கத்தில் ரயில்வே துறை சார்பில், ரயில்வே பாலங்களில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக, சேலம் ரயில் நிலையம் வழியாக இயக்கப்படும், ஹூப்ளி- தஞ்சாவூர் சிறப்பு ரயில் இன்றும் (செப்.11), நாளையும் (செப்.12), கொச்சுவேலி- பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் வரும் செப்டம்பர் 23, 24 ஆகிய தேதிகளிலும், எர்ணாகுளம்- பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் வரும் செப்டம்பர் 24, 25 ஆகிய தேதிகளிலும், முழுமையாக ரத்துச் செய்யப்படுகிறது.
அதேபோல், மேலும் ஐந்து ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படவுள்ளது. இதனை கருத்தில் கொண்டு பயணிகள் தங்களது பயணத்தைத் திட்டமிட வேண்டும்" என்று பயணிகளை சேலம் ரயில்வே கோட்டம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு இந்திய ரயில்வேக்கு சொந்தமான ஐஆர்சிடிசி (IRCTC) https://www.irctc.co.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



-hcTFAGMRGb.jpg)