ட்ரெண்டிங்

திருநங்கைகளிடம் மனுக்களைப் பெற்று கொண்ட ஆட்சியர் கார்மேகம்!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (செப்.04) காலை 10.00 மணிக்கு திருநங்கைகளுக்கான குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெற்றது. 

அப்போது, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப., திருநங்கைகளைச் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்று கொண்டார். அத்துடன், கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். 

அதைத் தொடர்ந்து, சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் திருநங்கைகள் கொடுத்த மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. அறிவுறுத்தினார். 

இந்த கூட்டத்தில் , மாவட்ட துணை ஆட்சியர், கூடுதல் ஆட்சியர், வட்டாட்சியர், கோட்டாட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.