ட்ரெண்டிங்

பிரியாணியில் பீஸ் இல்லையெனக் கூறி தாக்குதல்!

பிரியாணியில் பீஸ் இல்லை எனக் கூறி உணவக ஊழியர்கள் மீது போதைக் கும்பல் தாக்குதல் நடத்தியது. 

சேலம் மாவட்டம், சூரமங்கலத்தில் உள்ள பிரபல பிரியாணி உணவகத்திற்கு மதுப்போதையில் வந்த இரண்டு பேர், சிக்கன் பிரியாணி வாங்கியுள்ளனர். அப்போது, பிரியாணியில் பீஸ் இல்லை எனக் கூறி, பிரியாணி உணவக ஊழியர்களுடன் தகராறு செய்தனர். 

பின்னர் அங்கிருந்து சென்ற இருவரும் சிறிது நேரத்தில் 10- க்கும் மேற்பட்டோருடன் உணவகத்திற்குள் புகுந்து ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இது குறித்த புகாரில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சூரமங்கலம் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவத்தால், பிரியாணி உணவகத்தில் இருந்த வாடிக்கையாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.