ட்ரெண்டிங்

சேலம் மாநகராட்சி பட்ஜெட் 2024- ல் வெளியான அதிரடி அறிவிப்புகள்!

2024- 2025 ஆம் ஆண்டுக்கான சேலம் மாநகராட்சியின் பட்ஜெட்டை மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் இன்று (பிப்.21) காலை 10.00 மாமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்து உரையாற்றினார். பட்ஜெட் கூட்டத்தில், துணைமேயர் சாரதா தேவி, மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மாநகராட்சி பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள அறிவிப்புகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

பருவ காலங்களில் வெள்ள நீரால் பாதிக்கப்படுகின்ற பகுதிகளுக்கு ரூபாய் 65.00 கோடி மதிப்பில் சாக்கடை வசதி செய்தல், இஸ்மாயில்கான் ஏரியினை ரூபாய் 41.00 கோடி ,மதிப்பில் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளுதல், ரூபாய் 2 கோடி மதிப்பில் நாய்களுக்கான அறுவை சிகிச்சைக்கான கூடுதல் கட்டிடம் கட்டுதல், OSR இடங்களை கணிணி மயமாக்குதல், வார்டு- 44- ல் குடிநீர் மேல்நிலைத் தொட்டி அருகில் மாநகராட்சி இடத்தில் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளுதல், ரூபாய் 57 லட்சம் மதிப்பீட்டில் ஏடிசி நகர் முதல் டிவிஎஸ் பாலம் வரை உள்ள வரட்டாறு பாலம் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளுதல், ஐந்து தியேட்டர் பின்புறம் உள்ள ஆலமரத்துக்காடு அருகில் புதிய பாலம் ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல், மூலப்பிள்ளையார் கோயில் ஓடை ரூபாய் 70 லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல், ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் நெய்மண்டி அருணாச்சலம் தெரு முதல் செவ்வாய்பேட்டை இணைப்பு பாலம் திருமணிமுத்தாறு இடையே அமைக்கப்படும், ரூபாய் 3 கோடியில் கொண்டலாம்பட்டி பழைய சுடுகாடு பகுதியில் மின் மயானம் அமைத்தல், நான்கு வார்டு அலுவலகங்களுக்குட்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான 1/2 ஏக்கர் முதல் 1 ஏக்கர் உள்ள ஏதேனும் ஒரு காலி இடத்தினை கண்டறிந்து அப்பகுதியினை விற்பனை மண்டலம் (Vending Zone) பகுதியாக அறிவித்தல் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

எனினும் சேலம் மாநகராட்சியில் உள்ள மக்களுக்கான அறிவிப்புகளும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான அறிவிப்புகளும் இல்லாதததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.