தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, வரும் ஜனவரி 21- ஆம் தேதி அன்று வினாடி வினா போட்டி நடத்தப்பட உள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சேலம் மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கார்மேகம் இ.ஆ.ப. தெரிவித்துள்ளதாவது, "தமிழ்நாட்டில் வாக்காளர்கள் தேர்தல் நடைமுறையில் பங்கேற்பதை அதிகரிக்கும் நோக்கில் 14-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு SVEEP திட்டத்தின்படி மாநில அளவிலான பொது மக்களுக்கான வினாடி வினா போட்டி ஜனவரி 21- ஆம் தேதி அன்று காலை 11.00 மணி முதல் 11.15 மணி வரை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் கீழ்க்காணும் இணையதள முகவரியில் தங்கள் பெயர் மற்றும் விவரங்களை பதிவுச் செய்யலாம்.
இப்போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்கள் விவரங்களை https://www.erolls.tn.gov.in/Quiz2024 என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று பதிவுச் செய்துக் கொள்ளலாம். பதிவுச் செய்வதற்கு வரும் ஜனவரி 19- ஆம் தேதி கடைசி நாளாகும். இதில் கலந்து கொள்வதற்கு பங்கேற்பாளரின் கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியானது கட்டாயமாக உள்ளீடு செய்யப்பட வேண்டும். "இந்தியாவில் தேர்தல்கள்" என்ற தலைப்பின் அடிப்படையில் இந்த போட்டியானது நடத்தப்படவுள்ளது.
மேலும் விவரங்களுக்கு 1800- 4252-1950 என்ற மாநில உதவி மைய எண்ணிலோ, 1950 என்ற மாவட்ட உதவி மைய எண்ணிலோ தொடர்புக் கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.


-SXgDfGgJfO.jpg)