ட்ரெண்டிங்

வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் ஆய்வுச் செய்த அலுவலர்!

 

சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து, மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சிறப்புச் செயலாளருமான முனைவர் சங்கர் இ.ஆ.ப., இன்று (ஜன.22) நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்வில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மரு.அலர்மேல்மங்கை இ.ஆ.ப. உள்ளிட்டத் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர். 

 

அதைத் தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சிறப்புச் செயலாளருமான முனைவர் சங்கர் இ.ஆ.ப. தலைமையில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

 

கூட்டத்தில், சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் இ.ஆ.ப., கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மரு.அலர்மேல்மங்கை இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா, மேட்டூர் சார் ஆட்சியர் பொன்மணி, உதவி ஆட்சியர் (பயிற்சி) சுவாதி ஸ்ரீ, இ.ஆ.ப. உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

 

கூட்டத்தில் பேசிய மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சிறப்புச் செயலாளருமான முனைவர் சங்கர் இ.ஆ.ப., "சேலம் மாவட்டத்தில் 95.52 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசுப் பொதுத்தேர்விற்கு தயாராகும் மாணாக்கர்களின் நலனில் ஆசிரியர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும். அரசுப் பள்ளிகளில் குழந்தைகள் சரளமாக தாய்மொழியில் பேசவும், எழுதவும் செய்திடுவதை ஆசிரியர்கள் உறுதிச் செய்ய வேண்டும். 

 

கல்வித்துறை அலுவலர்கள் ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மற்றும் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.