இது தொடர்பாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், எர்ணாகுளம்- சென்னை எழும்பூர் இடையேயான சிறப்பு ரயில் (ரயில் எண் 06044) வரும் செப்டம்பர் 03- ஆம் தேதி அன்று இரவு 08.25 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய வழித்தடங்கள் வழியாக செப்டம்பர் 04- ஆம் தேதி அதிகாலை 05.07 மணிக்கு சேலம் ரயில் நிலையத்தை வந்தடையும்.
பின்னர் அதிகாலை 05.10 மணிக்கு சேலம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியாக காலை 10.45 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.
அதேபோல், மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூர்- எர்ணாகுளம் இடையேயான சிறப்பு ரயில் (ரயில் எண் 06043) செப்டம்பர் 04- ஆம் தேதி அன்று மதியம் 02.10 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக இரவு 07.22 மணிக்கு சேலம் ரயில் நிலையத்தை வந்தடையும். பின்னர், இரவு 07.25 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்படும் ரயில் ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக செப்டம்பர் 05- ஆம் தேதி அதிகாலை 03.15 மணிக்கு எர்ணாகுளம் ரயில் நிலையத்தைச் சென்றடையும். இந்த சிறப்பு ரயில் சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


