சேலத்தில் 153 டாஸ்மாக் ஊழியர்களுக்கு மெமோ – கடைகளை திறக்காதது ஏன் என நிர்வாகம் கேள்வி!
காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்திற்கு தனியாகப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் நேற்று பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள 161 டாஸ்மாக் கடைகளும் நேற்று திறக்கப்படாமல் இருந்தன. இந்நிலையில், கடைகளைத் திறக்காமல் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டது தொடர்பாக, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 153 டாஸ்மாக் ஊழியர்களுக்கு நிர்வாகம் சார்பில் விளக்கம் கேட்டு மெமோ அனுப்பப்பட்டுள்ளது.
அதில், டாஸ்மாக் கடைகளை ஏன் திறக்கவில்லை? எனக் கேள்வி எழுப்பி, இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இன்று சேலம் மாவட்டத்தில் உள்ள 161 டாஸ்மாக் கடைகளும் வழக்கம்போல் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. மேலும், அனைத்து கடைகளிலும் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் நடைமுறையும் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.



-SXgDfGgJfO.jpg)