தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜன.11) காலை 11.00 மணிக்கு சென்னையில் நடைபெற்ற அயலகத் தமிழர் தின நிகழ்ச்சி, சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
தமிழக முதலமைச்சரால் இந்தியாவில் பிற மாநிலங்களிலும், அயல்நாடுகளிலும் வசித்து வரும் அயலகத் தமிழர்களின் நலன் பேணுவதில் தொடர்ந்து தமிழ்நாடு அரசிற்கு ஒத்துழைப்பு நல்கிவரும் தமிழ்ச் சங்கங்களை ஒருங்கிணைக்கவும், அங்கீகரிக்கும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12- ஆம் நாள் அயலகத் தமிழர் தினமாகக் கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பினை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து செயல்படுத்தும் வகையில் இவ்வாண்டு 2024 "தமிழ் வெல்லும்" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சிறப்பாகக் கொண்டாட தமிழ்நாடு அரசால் திட்டமிடப்பட்டு, இவ்விழா நிகழ்வினை நேரலையில் அனைத்து மாவட்டங்களில் இணையதளத்தில் காண மாவட்டத்திலுள்ள பொதுக் கூட்ட அரங்கில் ஏற்பாடு செய்ய தெரிவிக்கப்பட்டது.
அதன்படி இன்றைய தினம் சேலம் மாவட்டத்தில் நேரலை காட்சியினை சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர், கல்லூரிகளின் தமிழ் பேராசிரியர்கள், பள்ளி தமிழ் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்குபெற்று காணொளியில் கண்டுகளித்தனர்.


-SXgDfGgJfO.jpg)