ட்ரெண்டிங்

5 மாவட்ட குப்பைகளை எரிக்கும் திட்டம் – அதிமுக வெளிநடப்பு!

 

சேலம் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில், ஐந்து மாவட்டங்களின் குப்பைகளைக் கொண்டு வந்து சேலையில் எரிக்கும் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சேலம் மாநகராட்சி இயல்பு மற்றும் அவசரக் கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையாளர் லலித் ஆதித்ய நீலம், துணை மேயர் சாரதா தேவி மற்றும் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி, ஐந்து மாவட்டங்களின் குப்பைகளைக் கொண்டு வந்து சேலையில் எரிக்கும் திட்டத்தால் மாநகராட்சியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும், முதலமைச்சரின் 110 விதியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சேலம் செட்டிச்சாவடி பகுதியில் ரூ.50 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட சூரிய மின் உற்பத்தித் திட்டம் இன்னும் முழுமையடையாத நிலையில், புதிய பேருந்து நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பில் புதிய சூரிய மின் உற்பத்தித் திட்டம் அமைப்பதற்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்தார். தனியார் குடிநீர்த் திட்டத்தையும் கைவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து, யாதவமூர்த்தி தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் அனைவரும் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த யாதவமூர்த்தி, குப்பை எரிக்கும் திட்டத்தைக் கைவிடும் வரை தங்களது எதிர்ப்பைத் தொடர்ந்து தெரிவிப்போம் எனக் கூறினார்.