ட்ரெண்டிங்

நியாய விலைக்கடையில் அருள் எம்.எல்.ஏ. அதிரடி ஆய்வு!

பா.ம.க.வின் சேலம் மாநகர் மாவட்டச் செயலாளரும், சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான அருள், சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 17வது வார்டில் உள்ள தென் அழகாபுரத்தில் உள்ள நியாய விலைக்கடைக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு, கோதுமையை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது, அரிசி தரமற்றதாக இருப்பதைப் பார்த்த எம்.எல்.ஏ. அருள் உடனடியாக தனது தொலைபேசியை எடுத்து, சேலம் மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் துறையின் அதிகாரியைத் தொடர்புக் கொண்டு பேசினார். நியாய விலைக்கடையின் பெயரைக் குறிப்பிட்டு பேசிய எம்.எல்.ஏ, அரிசியை உடனடியாக மாற்றி தரும்படி கேட்டுக் கொண்டார். 

அதைத் தொடர்ந்து, நியாய விலைக்கடைக்கு வந்த பொதுமக்களிடம் கலந்துரையாடினார். இதனிடையே, இந்த நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி தரமற்று இருப்பதாக தொடர்ந்து புகார் ஆய்வுச் செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.