ட்ரெண்டிங்

மார்கழி மாதத்தையொட்டி, அம்மாப்பேட்டையில் சொற்பொழிவு நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு ஏற்பாடு!

 

மார்கழி மாதம் பிறந்துள்ள நிலையில், சேலம் மாவட்டம், அம்மாப்பேட்டையில் உள்ள செங்குந்த முதலியார் திருமண மண்டபம் நெ 1-ல் 38-வது ஆண்டாக மார்கழி பெருவிழா குழு சார்பில், சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

இன்று (டிச.17) முதல் ஜனவரி 14- ஆம் தேதி வரை மார்கழிப் பெருவிழா நடைபெறுகிறது. நாள்தோறும் தினசரி இரவு 07.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. முதல் நாளான இன்று (டிச.17) மாலை 06.00 மணி முதல் 07.00 மணி வரை பரதநாட்டிய கலைஞர் பூவிழியின் பரதநாட்டியம் நடைபெறவுள்ளது.

 

பேராசிரியர் அப்துல்காதர், திருமுருக வாரியார் வாரிசு, ஆன்மீக திலகம், கலைமாமணி தேசமங்கையர்க்கரசி உள்ளிட்ட பிரபலங்களும் மார்கழி பெருவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசவிருக்கின்றனர். குறிப்பாக, தேசமங்கையர்க்கர்சி வரும் ஜனவரி 1 முதல் ஜனவரி 7- ஆம் தேதி வரை ஏழு நாட்கள் ஆன்மீக சொற்பொழிவை நிகழ்த்தவிருக்கிறார்.

 

சொற்பொழிவில் அனைவரும் பங்கேற்கலாம்; அனுமதி இலவசம் என்பது மார்கழி பெருவிழாவின் கூடுதல் சிறப்பு ஆகும். இந்த சொற்பொழிவைக் காண, சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500- க்கும் மேற்பட்டோர் வருகை தருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.