ட்ரெண்டிங்

இடைத்தேர்தலுக்குப் பிறகு சேலம் திரும்பிய EPS!

 

நாளை ஓமலூரில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் – அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்திப்பதாகத் தகவல்

சேலம்: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரம் மற்றும் கட்சிப் பணிகளை முடித்துக்கொண்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் இருந்து பயணிகள் விமானம் மூலம் சேலம் வந்தடைந்தார்.

சேலம் விமான நிலையத்தில் அவருக்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து, செய்தியாளர்கள் அவரிடம் இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, நாளை ஓமலூரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்திப்பதாகவும் தெரிவித்தார்.

இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி சேலம் திரும்பியுள்ள நிலையில், நாளை நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.