ட்ரெண்டிங்

தீபாவளி பண்டிகையையொட்டி, கோவை- திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்பட

 

தீபாவளி பண்டிகையையொட்டி, கோவை- திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

 

இது தொடர்பாக, சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தீபாவளி பண்டிகையையொட்டி, பயணிகளின் வசதிக்காகக் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, கோவை- திண்டுக்கல் இடையே இருமார்க்கத்திலும் இன்று (நவம்பர் 11) முதல் நவம்பர் 14- ஆம் தேதி வரை முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

 

காலை 09.20 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், மதியம் 01.00 மணிக்கு திண்டுக்கல் ரயிலை நிலையத்தைச் சென்றடையும். மறுமார்க்கத்தில் மதியம் 02.00 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், மாலை 05.30 மணிக்கு திண்டுக்கல் ரயிலை நிலையத்தைச் சென்றடையும்.

 

இந்த சிறப்பு ரயில்கள், போத்தனூர், கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.