ட்ரெண்டிங்

காவல் ஆய்வாளர்களைப் பணியிட மாற்றம் செய்து சேலம் மாநகர காவல் ஆணையாளர் உத்தரவு!

சேலம் மாநகரில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்களைப் பணியிட மாற்றம் செய்து சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி இ.கா.ப. உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி, அம்மாப்பேட்டை காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் சிவக்குமார், அன்னதானப்பட்டி காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளராகவும், அன்னதானப்பட்டி கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர் கணேசன், அஸ்தம்பட்டி காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளராகவும், அஸ்தம்பட்டி காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் பால்ராஜ் அம்மாப்பேட்டை காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

அதேபோல், காவல் கட்டுப்பாட்டு அறையின் ஆய்வாளர் பேபி, அன்னதானப்பட்டி கிரைம் பிரிவின் காவல் ஆய்வாளராகவும், அன்னதானப்பட்டி காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் சின்னத்தங்கம், சேலம் நகர காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளராகவும், சேலம் நகர காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் ராணி, வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றுதல் பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.