ட்ரெண்டிங்

சேலம் மக்களுக்கு புதிய பேருந்து சேவை தொடக்கம் !

 

சேலத்தில் மஞ்சள்–சிவப்பு நிறத்தில் 26 புதிய நகரப் பேருந்துகள் தொடக்கம்

பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார் அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்

சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் புதிதாக 26 நகரப் பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இன்று தொடங்கி வைக்கப்பட்டன. இதனை போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதுகுறித்து வெளியாகியுள்ள செய்திகளின்படி, இந்த 26 பேருந்துகளும் வழக்கமான நீல நிறத்திற்கு பதிலாக மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

புதிதாக இயக்கப்படும் பேருந்துகள் ஓமலூர், மல்லசமுத்திரம், ஆட்டையாம்பட்டி, தீவட்டிப்பட்டி, தோப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட உள்ளன. இதன் மூலம் அந்தந்த பகுதிகளுக்கான நகரப் பேருந்து சேவை மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி, மாநகராட்சி ஆணையாளர் லலித் ஆதித்யா நீலம் மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனிடையே, புதிதாக இயக்கப்பட்டுள்ள பேருந்துகள் தமிழக வெற்றிக் கழகத்தின் மஞ்சள்–சிவப்பு கொடி நிறங்களை ஒத்த வகையில் இருப்பது பொதுமக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன.