சேலம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு தீயணைப்பு வீரர்கள் நேரடி செயல்முறை விளக்கம்
சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டால் அதனை தடுப்பது மற்றும் தீ விபத்தில் இருந்து பாதுகாப்பாக தப்பிப்பது குறித்து தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சேலம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். 2,000-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மருத்துவமனையில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டால் அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது, நோயாளிகள் மற்றும் பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பாக வெளியேற்றுவது என்பது குறித்து சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மருத்துவமனை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர். தீயணைப்பு வீரர்கள், தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், தீயை அணைக்கும் முறைகள் மற்றும் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேறுவது குறித்து விளக்கமளித்தனர்.
மேலும், தீயணைப்புக் கருவிகளை முறையாக பயன்படுத்துவது உள்ளிட்டவை குறித்து நேரடி செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் அவசர காலங்களில் உரிய முறையில் செயல்படுவதற்காக இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.



-SXgDfGgJfO.jpg)