சேலம் மாவட்ட ஊர்க்காவல் படையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து மாவட்ட காவல்துறை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சேலம் மாவட்ட ஊர்க்காவல் படையில் ஆத்தூர், சங்ககிரி, மேட்டூர் படைப்பிரிவில் 24 காலிபணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்ப, தகுதியான நபர்கள், ஜனவரி.25-ல் சேலம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடக்கும் தேர்வில் பங்கேற்கலாம். 10- ஆம் வகுப்பு கல்வி தகுதி, 18 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்கள் 167 செ.மீ, பெண்கள் 157 செ.மீ . உயரம், நல்ல உடற்தகுதி பெற்றவராக இருக்க வேண்டும்; விண்ணப்பதாரர் எந்த குற்ற வழக்கிலும் ஈடுபட்டிருக்கக் கூடாது.
தேர்வுக்கு வரும்போது பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு, கல்வி தகுதி சான்றிதழ், ஆதார் கார்டு ஆகியவற்றின் அசல் நகல் கொண்டு வர வேண்டும். ஊர்க்காவல் படைபிரிவு தன்னார்வ தொண்டுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தேர்வு செய்யப்படுவோர் மாதத்துக்கு 5 நாட்கள் மட்டுமே பணிபுரிய அழைக்கப்படுவர். அந்த நாளில் தினமும் 560 ரூபாய் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



-hcTFAGMRGb.jpg)