தலைவாசல் அருகே தனியார் ஜவ்வரிசி ஆலைத் தொடங்க எதிர்ப்புத் தெரிவித்து, விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் உட்கோட்டத்தில் 150 மரவள்ளிக்கிழங்கு மற்றும் ஜவ்வரிசி உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக, தலைவாசல் அருகே உள்ள காட்டுக்கோட்டை ஊராட்சிப் பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக 20- க்கும் மேற்பட்ட மரவள்ளிக்கிழங்கு அரவை ஆலைகள் இயங்கி வருகின்றனர்.
இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் பாசன வாய்க்காலில் கலப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில், அந்த பகுதியில் புதிதாக தனியார் ஜவ்வரிசி ஆலை தொடங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் கோட்டை மைதானத்தில் இன்று (ஆகஸ்ட் 28) காலை 09.00 மணிக்கு தொடங்கி, மாலை 06.00 மணி வரை நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் என சுமார் 500- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

