ட்ரெண்டிங்

பியூஸ் மானுஷ் சமூக வலைதள பதிவு... பாஜக புகார் !

 

சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷை கைது செய்யக் கோரி பாஜக வழக்கறிஞர் பிரிவினர் புகார்

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக வீடியோ பதிவிட்டதாகக் கூறி, சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷை கைது செய்யக் கோரி சேலம் பாஜக வழக்கறிஞர் பிரிவினர் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோ பதிவு செய்ததாக பாஜக தரப்பினர் குற்றம் சாட்டினர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட வீடியோ பதிவுகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பியூஸ் மானுஷை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சேலம் பாஜக கிழக்கு மாவட்டத் தலைவர் சண்முகநாதன், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் கூறப்படும் பியூஸ் மானுஷை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், அவர் பதிவிட்டதாகக் கூறப்படும் அவதூறு வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து கருத்து தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில், நாட்டின் பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் குறித்து அவதூறாக பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது என்றும் சண்முகநாதன் கூறினார்.

இதுதொடர்பாக காவல்துறை உரிய விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக வழக்கறிஞர் பிரிவினர் வலியுறுத்தினர்.