ட்ரெண்டிங்

மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு! 

2023-24- ஆண்டிற்கான மணிமேகலை விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்துள்ளதாவது, மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும், கிராம ஊராட்சிப் பகுதிகளிலுள்ள சிறப்பாக செயல்படும் சுய உதவிக்குழுக்கள். பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் தொகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகியோர்களுக்கு மணிமேகலை விருது வழங்குவதற்காக தமிழ்நாடு அரசால் ரூபாய் 3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மணிமேகலை விருது தேர்வுக்கான தகுதி அடிப்படையிலான தகுதிகள் மற்றும் 6 மதிப்பீட்டு காரணிகள் குறித்து, மாநில மற்றும் மாவட்ட அளவில், கிராம ஊராட்சிப் பகுதிகளிலுள்ள சிறப்பாக செயல்படும் சுய உதவிக்குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் கிராம
வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் தொகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகியவை விருதிற்காக தேர்வுச் செய்யும் நெறிமுறைகள் இவ்வரசாணையில் வழங்கப்பட்டுள்ளது. எனவே 2023-24-ஆம் ஆண்டிற்கான தகுதியான மேற்கண்ட சமுதாய அமைப்புகளிடமிருந்து வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

மணிமேகலை விருதுக்கான முன்மொழிவுகளை ஜூலை 05- ஆம் தேதிக்குள் திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிர் திட்டம்), இரண்டாம் தளம், அறை எண்:207 மாவட்ட ஆட்சியரகம், சேலம் 636001 என்ற முகவரியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.