ட்ரெண்டிங்

குடிநீரில் புழு விவகாரம்: சேலத்தில் பொதுமக்கள் போராட்டம் !

 

சேலம்: குடிநீரில் புழு இருந்ததாக குற்றச்சாட்டு – குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

சேலம், ஜூலை 30: 

சேலம் மாநகராட்சி பச்சப்பட்டி பிரதான சாலை, 40வது வார்டு பகுதியில் விநியோகிக்கப்பட்ட குடிநீரில் புழுக்கள் இருந்ததாகக் கூறி, அப்பகுதி பொதுமக்கள் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடந்த இரண்டு மாதங்களாக மாநகராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீரில் புழுக்கள், கோழி இறகுகள் உள்ளிட்ட கழிவுகள் கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனால் அந்த தண்ணீரை பயன்படுத்தும் மக்கள் உடல்நல பாதிப்புக்கு ஆளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், மாநகராட்சி குடிநீரை குடித்த குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டதாகவும், குடிநீர் விநியோகத்தில் உள்ள குறைபாடுகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

மாநகராட்சி குடிநீர் விநியோகத்தை தனியார்மயமாக்கும் திட்டத்திற்கு ஏற்கனவே பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், குடிநீர் தொட்டிகள் முறையாக சுத்தம் செய்யப்படாமல் இருப்பதாலும், கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.