சேலத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள், பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு அடுத்தகட்ட அரசியல் முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
மேலும், "37 ஆண்டுகள் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் செயல்பட்டுள்ளோம். அவர் அரசியல் துறவறம் அறிவித்துள்ள நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அன்புமணி ராமதாஸை தலைவராக ஏற்கக் கூடாது என்பதே கூட்டத்தில் பலரும் தெரிவித்த கருத்தாக உள்ளது. புதிய கட்சி தொடங்குவதா அல்லது வேறு கட்சியில் இணைவதா என்பது குறித்து விரைவில் அறிவிப்போம். எந்த முடிவை எடுத்தாலும் மருத்துவர் ராமதாஸ் எங்களுக்கு என்றும் தலைவரும் வழிகாட்டியும்தான்" என்றார்.
மேலும், பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து அழைப்புகள் வந்துள்ளதாகவும், அனைத்து கருத்துகளையும் பரிசீலித்த பிறகே இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றும் அருள் தெரிவித்தார்.



-hcTFAGMRGb.jpg)