வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாமினை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் முன்னிலையில் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திடலில் இன்று (ஆகஸ்ட் 30) தொடங்கி வைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு அரசு வேளாண் பெருமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது 2024- 2025 வேளாண்மை உழவர் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை இயக்குதல் பராமரித்தல் தொடர்பான மாவட்ட அளவிலான முகாம்கள் நடத்தி இதுகுறித்த தொழில் நுட்ப கையேடுகளை விவசாயப் பெருமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், இன்றைய தினம் சேலம் மாவட்டத்தில் வேளாண் இயந்திரங்கள், கருவிகளை இயக்குதல் மற்றும் பராமரித்தல் தொடர்பான மாவட்ட அளவிலான முகாம் விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் வகையில் நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாமில் தனியார் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் துறைசார்ந்த கள அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்குபெற்று விவசாயிகளுக்கு இயந்திரங்களை முறையாக பராமரிக்கும் முறையினையும் மேலும் புதிய தொழில் நுட்பங்களை அறிந்து கொள்ளும் வகையில் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
மேலும், இம்முகாம்களில் தனியார் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் தயாரிப்பு
நிறுவனங்களின் பொறியாளர்களுடனும், அலுவலர்களுடனும் விவசாயிகள் நேரில் கலந்துரையாடி இயந்திரங்களை இயக்குதல் மற்றும் பராமரித்தலில் செய்யக்கூடியது. செய்யக் கூடாதது பல்வேறு உபகரணங்களைப் பொருத்துதல், உதிரிபாகங்கள் குறித்த தெளிவுரை மற்றும் செயல்முறை விளக்கம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் செய்து காண்பிக்கப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


