விளையாட்டு

ஜியோ சினிமாவில் லைவ்- சேலம் கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி!

 

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள சேலம் கிரிக்கெட் ஃபவுண்டேஷன் மைதானத்தில் வரும் ஜனவரி 23- ஆம் தேதி முதல் ஜனவரி 26- ஆம் தேதி வரை நான்கு நாட்கள் ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதற்காக, கிரிக்கெட் மைதானத்தைத் தயார்படுத்தும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

 

இப்போட்டிகள் இந்திய நேரப்படி காலை 09.30 மணிக்கு தொடங்குகிறது. முதல் போட்டியில் தமிழ்நாடு அணியானது சண்டிகர் அணியை எதிர்கொள்கிறது. இந்த தகவலை பி.சி.சி.ஐ தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் அறிவித்துள்ளது. 

 

முதன்முறையாக ஜியோ சினிமா மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 ஆகிய சேனல்கள் சேலத்தில் நடைபெறும் ரஞ்சிக்கோப்பையை நேரலையாக செய்யவுள்ளனர். இதனால் சேலம் மாவட்டத்தில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ந்த அடைந்துள்ளனர்.