சேலம் மாவட்டம், வாழப்பாடி ஊராட்சி ஒன்றியப் பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.பிருந்தாதேவி.இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து தமிழ்நாடு அரசு பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறது. இத்தகைய திட்டங்கள் தரமாகவும் உரிய கால அளவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதை உறுதி செய்திடும் வகையில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்.சேலம் மாவட்டம், வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்,மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம்,பள்ளிகள் உட்கட்டமைப்புத் திட்டம்,அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்,கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் ரூ.138.88 கோடி மதிப்பீட்டிலான 4,780 திட்டப் பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு,4,193 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 587 பணிகள் நடைபெற்று வருகின்றன.
அந்தவகையில், இன்றையதினம் வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம், முத்தம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.9.6 இலட்சம் மதிப்பில் கால்வாய் அமைக்கப்பட்டு வரும் பணியினையும், முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமான திட்டத்தின் கீழ் சிங்கிபுரம் ஊராட்சியில் ரூ.24 இலட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டும் பணியினையும், கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் ரூ.24 இலட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டும் பணியினையும், மன்னாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.34.75 இலட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளையும் தரமாகவும், உரிய கால அளவிலும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரவும், குடிநீர் தொடர்பான கோரிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துப் பணியாற்றிடவும் போது தொடர்புடைய அலுவலர்களுக்கு இந்த ஆய்வின் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக,மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.பிருந்தாதேவி,தெரிவித்தார்.


