ட்ரெண்டிங்

ரூபாய் 12.70 லட்சத்துக்கு ஏலம் போன தேங்காய் பருப்பு மூட்டைகள்!

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த மேச்சேரி பிரிவு ரோடு பகுதியில் உள்ள தமிழக அரசுக்கு சொந்தமான வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தின் ஓமலூர், தாரமங்கலம், வாழப்பாடி, மேட்டூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் விளைப்பொருட்களை, இங்கு கொண்டு வந்து நேரடி விற்பனை செய்து வருகின்றனர். 

அந்த வகையில், நேற்று (ஆகஸ்ட் 26) நடைபெற்ற தேங்காய் பருப்பு ஏலத்தில் 28 விவசாயிகள் 421 மூட்டைகளில் 174.84 குவிண்டால் அளவிற்கு தேங்காய் பருப்பு மூட்டைகளைக் கொண்டு வந்தனர். நாள் முழுவதும் நடைபெற்ற ஏலத்தில் சுமார் 12.70 லட்சம் ரூபாய்க்கு தேங்காய் பருப்பு மூட்டைகள் ஏலம் போகின. 

தேங்காய் பருப்பு கிலோவுக்கு அதிகபட்சமாக 77 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 60 ரூபாய்க்கும் ஏலம் போனது. ஏலம் விடப்பட்டவுடன் சம்மந்தப்பட்ட விவசாயிகளுக்கு உரிய பணம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.